Saturday, April 13, 2013

Huawei Dongle ஐ எவ்வாறு Unlock செய்வது ?

நாம் பயன்படுத்துகின்ற பெரும்பாலான Dongleகள் தனியாக ஒரே ஒரு Network மட்டும் இயங்குகின்ற முறையில் அதனை அந்த Network Lock செய்து இருப்பார்கள் அதிலே நாம் வேறு ஒரு Network ஐ பயன்படுத்த முடியாது. அவ்வாறான Dongle களை எவ்வாறு Unlock செய்வதென்று இன்றைய தினம் நாம் பார்க்க இருக்கின்றோம்.


 இதற்கு முதலாவதாக நீங்கள் உங்களது Dongle இனது IMEI நம்பரினை அறிந்திருக்க வேண்டும். அதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்ப்போம். உங்களது Dongle Cover Box இல் Sticker ஒன்று காணப்படும் அதிலே IMEI பொறிக்கப்பட்டிருக்கும், அல்லது நீங்கள் Dongle வேண்டிய பற்றுசீட்டில் காணப்படும்.

அதிலும் உங்களால் பெறமுடியாவிட்டால் உங்களது Dongle இல் SIM CARD Insert பண்ணுவதற்கு அருகில் பொறிக்கப்பட்டிருக்கும் கீழுள்ள படத்தினை அவதானிக்க..



நாம் இனி Huawei Dongle களை Unlock செய்வதனை பார்ப்போம். இதற்கு கீழ் வரும் படி முறைகளை பின்பற்றுங்கள்..


01. முதலில் Tools Texby  இணையதளத்திற்கு செல்லுங்கள்

02. அங்கே உள்ள பாக்ஸில் உங்களது IMEI நம்பரினை வழங்க வேண்டும்.



03. IMEI நம்பரினை வழங்கி அதன் அருகிலுள்ள Submit என்ற பொத்தானை அழுதுங்கள் 



04. அதன் பின்னர் சில வினாடிகளில் உங்களுக்கான Unlock Code மற்றும் Flash Code கிடைக்கபெறும் (கீழுள்ள படத்தினை அவதானிக்க) 



05. நீங்கள் வேறு ஒரு network SIM Card இணை Insert செய்யும் போது Unlock Code கேக்கும் அப்போது மேலே பெற்ற Code இணை வழங்குங்கள் Dongle Unlock ஆகிவிடும். 

மற்றொரு முறை Code Auto ஆக கேக்காவிடின் அதனை Manual ஆக  வழங்க வேண்டும் அதற்கு Tools - Pin Operation - Unlock சென்று Code இணை வழங்குங்கள் உங்கள் Dongle Unlock ஆகிவிடும். 



இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன் ..



Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.