Sunday, April 7, 2013

கூகிளில் துணைநிலை முகவரிகள் தடைசெய்யப்பட்டது...!


உலகின் முன்னணி தேடல் தளமான கூகிள் ஸ்பாம் செய்பவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதில் ஒரு பகுதியாக தற்போது கூகிளில் .co.cc டொமைன் வழங்கி தடுக்கப்பட்டுள்ளது, .co.cc என்பது ஒரு இலவச டொமைன் வழங்கியாகும் எனவே பணம் கட்டி .com,.net,.org வாங்க முடியாத பலர் இந்த இலவச டொமைனில் தங்கள் தளத்தை நடத்திவருகிறார்கள்.


இந்த இலவச டொமைனானது நேரடியாக தங்கள் தளத்தின் முகவரியாக வேலை செய்வதில்லை Fake addressing (அ) domain masking எனப்படும் முறையில் வேலை செய்கிறது, அதாவது உங்கள் உண்மையான முகவரி ஒருபுறமிருக்க இதுவும் உங்கள் தளத்தின் முகவரியாக செயல்படும். உதாரணத்திற்கு எனது தளத்தின் உண்மையான முகவரி http://tamiltechzone.blospot.com ஆகும் நான் இந்த முறையை பயன்படுத்தினால் என் முகவரியை இப்படி மாற்றுவேன் என வைத்துக் கொள்ளுவோம் http://tamiltechzone.co.cc, இதில் நீங்கள் எந்த முகவரியை(URL) பயன்படுத்தினாலும் அது இத்தளத்தையே வந்தடையும் இதுவே டொமைன் மாஸ்கிங்.

வசதி நன்றாக இருக்கிறதல்லவா? ஆனால் இதுவே ஸ்பாம்மர்களுக்கு வசதியாக போய்விட்டது, அவர்கள் இதில் ஒரு டொமைன் எடுத்துக்கொண்டு ஏதேனும் ஒரு தளத்தில் இருந்து சிலவற்றை தமது தளத்தில் லிங்க் செய்து கொண்டு கூகிள் பட்டியலில் ஒரு ரேங்கிற்காக காத்திருக்கின்றனர் இதனால் இணைய உலகானது குப்பையாக மாறிவிடுகிறது, இதனை தவிர்ப்பதற்காக கூகிளானது இந்த .co.cc துணைநிலை டொமைனை தடைசெய்துள்ளது, இது மேலும் மற்ற துணைநிலை டொமைன்களுக்கும் தொடரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரத்திற்கு கீழே உள்ள படத்தில் உள்ளதை முயற்சித்து பார்க்கவும்.



இது குறித்து கூகிளின் ஸ்பாம் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி மாட் கட்ஸ்(Matt Cutts) தனது கூகிள்+ பக்கத்தில் கூறுகையில் ”நாம் அனைவரையும் அனுமதிக்கவேண்டும் என்றே எண்ணுகிறோம் ஆனால் ஒரே டொமைனில் பல ஆயிரக்கணக்கான தரமற்ற துணைநிலை டொமைன்கள் இருப்பதால் நாம் அதை தடை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பல தரமான வலைப்பதிவுகள் இந்த சப் டொமைனில் இயங்கி வந்தாலும் அதிகளவில் ஸ்பாம்மர்கள் இருப்பதால் இவ்வகை தளங்கள் இனிமேல் கூகிள் தேடல் முடிவுகளில் இடம்பெறாது, ஸ்பாம்மர்களை தடுப்பதே கூகிளின் தலையாய நோக்கம்” என்றார்.


இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கின்றேன்


Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.