Showing posts with label ANDROID. Show all posts
Showing posts with label ANDROID. Show all posts

Sunday, July 14, 2013

சம்சுங் மொபைலில் முக்கியமான குறியீட்டு எண்கள்...




இன்றைய கையடக்க தொலைபேசியின் வளர்ச்சியின் சிகரம் தொட்டு இருக்கின்றது சம்சுங் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நாளுக்கு நாள் புதுமைகளை எமக்கு அறிமுகம் செய்கின்றது.

இன்று சம்சுங் மொபைல் பெரும் வரவேற்பை மக்களிடையே கொண்டுள்ளது. சம்சுங் மொபைல் பயன்படுத்தும் நாம் அவசியமாக அறிந்து இருக்க வேண்டிய முக்கியமான குறியீடுகளை இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

Friday, July 12, 2013

அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் இருந்து WI FI மூலமாக உங்களது கணனிகளை இணையத்துடன் இணைப்பதற்கு..




நாம் ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்துகின்ற Mobile Data களைக் கொண்டு அதனை Wi Fi ஆக மாற்றி  எமது கணனிகளில் இணைய தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இதனை பயன்படுத்த எமக்கான Wi Fi கணக்கு ஒன்றினை நாம் வைத்திருக்க வேண்டும் இதனை எமது ஸ்மார்ட் தொலைபேசிகளில் இருந்து எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நான் இன்றைய பதிவில் கற்றுத்தருகின்றேன்..

Wednesday, May 22, 2013

ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது எப்படி ?



இன்றைய காலகட்டத்தில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளை பயன்படுத்தும் தமிழ் பேசுபவர்களாகிய நாம்   ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற பிரச்சினை தமிழில் எழுதுவது, படிப்பது தான். இனி அந்த பிரச்சினை உங்களுக்கு வேண்டாம்.  உங்களுக்கு ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது பற்றி நான் இன்றைய பதிவில் சொல்லி தர போகிறேன்.





ஆண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதற்கு :

ஆன்ட்ராய்ட்டில் தமிழில் எழுதுவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில. 

நான் பயன்படுத்துவது எழுத்தாணி, அதனையே உங்களுக்கும் சொல்லி தருகிறேன். நீங்கள் Play Store சென்று எழுத்தாணி என்னும் அப்ளிகேஷனை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். 



இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings > Language & Input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & Input Methods என்ற இடத்தில் (Ezhuthani) இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.



அதன் பின்னர் நீங்கள் எழுத துவங்கும் முன்பு திரையின் மேலே Swipe செய்து Choose Input Method என்று இருப்பதை Tap செய்யுங்கள்.



அதன் பின்னர் நீங்கள் நிறுவிய அப்ளிகேஷனை Tap செய்யுங்கள். அவ்வளவு தான் இனி தமிழில் உங்களால் எழுத முடியும்.


ஆண்ட்ராய்டில் தமிழில் படிப்பதற்கு :


ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களை மொபைலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே எம்மால் படிக்க முடியும். அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ஒரு சிறிய மாற்றத்தினை மட்டும் செய்தால் போதும். 

அதாவது Browser  Setting பகுதியில் Language என்ற இடத்தில் "Auto-Detect" என்று மாற்றினால் Browser ல் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.


எந்த ஒரு ஆண்ட்ராய்ட் பதிப்பாக இருந்தாலும் சரி Opera Mini உலாவியில் தமிழ் எழுத்துக்களை உங்களால் படிக்கமுடியும் அதற்கு நான் கீழே சொல்ல போகும் மாற்றங்களை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.


Opera Mini உலாவிக்கு சென்று அங்கே மேலுள்ள Address Bar இல் opera:config என டைப் செய்து Go என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வருகின்ற பக்கத்தில்  Use bitmap fonts complex scripts என்னுமிடத்தில் No என்று இருப்பதை Yes என மாற்றம் செய்யுங்கள்.


Yes என மாற்றம் செய்த பின்னர் கீழுள்ள Save என்ற பட்டாணி அழுத்தி Save செய்து கொள்ளுங்கள்.

இனி உங்களது தொலைபேசிகளில் தமிழ் தளங்களை பார்வையிட முடியும். (கீழுள்ள படத்தினை கவனிக்க..)



பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கின்றேன்.



Tuesday, May 14, 2013

ஸ்மார்ட் போன்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட டெனிம் ஜீன்ஸ் (வீடியோ)





நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் பாவனையாளர் எனின், உங்கள் டெனிம் ஜீன்ஸ் பொக்கெட்டுக்குள் அந்த போனை வைத்து எடுப்பது என்றாலே பெரிய பாடு தான்.

ஸ்மார்ட் போன்கள் சந்தை போட்டிக்கு ஏற்ப தமது போன்களின் திரை அளவை மொடெலுக்கு மொடெல் பெரிதாக்கி செல்கின்றன.

வளைந்து நெளிந்து உங்களை அலர்ட் செய்ய தயாராகும் ஸ்மார்ட்போன் திரைகள்!



இன்றைய ஸ்மார்ட் போன்கள் உங்களுக்கு அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்தால், சத்தம் போட்டோ, அல்லது அதிர்வு மூலமோ அலர்ட்(Alert) செய்யும்.
ஆனால் வருங்காலத்தில் வர இருக்கும் ஸ்மார்ட் போன் திரைகள் வளைந்து, நெளிந்து உங்களை அலர்ட் செய்ய காத்திருக்கின்றன.

Thursday, May 9, 2013

சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது ?




இன்று நாம் அனைவரும் அதிகம் பயன் படுத்துகின்ற தொலைபேசிகள் அனைத்தும் அன்ட்ராய்ட் சாதனமாகவே இருக்கின்றது. இதிலே  (யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய) சமூக வலைதளங்கள், அல்லது ஏனைய இணைய தளங்களில் உள்ள வீடியோ கோப்புக்களையும் பதிவிறக்கி, இணைய இணைப்பு இல்லாத சந்தர்ப்பங்களில் அதனை பயன்படுத்த அனைவரும் விரும்புவோம் அல்லவா. அதனை எவ்வாறு பதிவிறக்குவது என்பதனை இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

Wednesday, April 17, 2013

நாளாந்த கடமைகளை திட்டமிட கூகுல் இப்படி உதவுகிறது



இணைய உலகில் பல்வேறு சேவைகளை வழங்கி பிரபல்யமடைந்து வரும் கூகுள் நிறுவனமானது தனது பயனர்களுக்கென மற்றுமொரு Widget மென்பொருளினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனிவரும் நாளில் ஸ்மாரட் போன்கள் இப்படித் தான் இருக்கும்


Picture 1
பல்வேறு ஸ்மார்ட்போன்கள் நீங்கள் நம்பமுடியாத வடிவமைப்புடன் வெளிவரப்போவதாக கிசுகிசுக்கள் நாள்தோறும் வெளியாகின்றன.அந்த வகையில் இங்கே வித்தியாசமான கற்பனைகளுடன் வெளிவந்துள்ள சில ஸ்மார்ட்போன்களின் மாதிரிகள்

அனைத்து மொபைல்களுக்குள்ளும் நுழையும் பயபொக்ஸ்


பிரபல இணைய உலவியான ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் மொபைல்களுக்கான தனி இயங்குதளத்தை உருவாக்கியுள்ளதையடுத்து தற்போது பயர்பாக்ஸ் நிறுவனம் TCL, ZTE, LG மற்றும் Huawei போன்ற சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பயர்பாக்ஸ் இயங்குதளம் கொண்ட மொபைல்களை இந்த வருடம் மத்தியில் வெளியிடவுள்ளது.

அன்ரோயிட் சாதனங்களை சிறப்பாக பயன்படுத்த உதவும் அப்ளிகேசன்


தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயங்குதளமாக கூகுளின் அன்ரோயிட் மாறிவருகின்றது.

இதன் விளைவாக புதிதாக அறிமுகமாகும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களும் அதிகளவில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாக காணப்படுகின்றன.

Tuesday, April 9, 2013

Android தொலைபேசிகளில் Youtube வீடியோக்களை எவ்வாறு Download செய்வது ..


நாம் இன்று அநேகமானோர் Android  கையடக்க தொலைபேசியினை பயன்படுத்தி வருகின்றோம். அதில் அதிகமாக வீடியோ கோப்புக்களை பார்ப்பதற்காக யூ-டியூப் தளத்தினையே அதிகம் பயன்படுத்தி வருகின்றோம், அதிலுள்ள வீடியோ கோப்புக்களை இணைய இணைப்பு இருக்கின்ற வேளைகளில் மாத்திரமே

Wednesday, April 3, 2013

WhatsApp மொன்பொருளும் அதன் செயல்பாடுகளும்!

இன்று முகநூல் போன்று இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கின்றது WhatsApp என்றால் அது மிகையாகாது.

உங்கள் மொபைலிருந்து WhatsApp மொன்பொருள் உதவியுடன்உங்கள் நண்பர்கள்வுடன் அரட்டை அடிக்கலாம்இதில் உள்ள வசதிகள்:

Thursday, March 28, 2013

சக்தி FM தனது ஆப்பிள், ஆன்ட்ரெய்ட் அப்ளிக்கேஷன் ஐ வெளியிட்டது..


உங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் சக்தி FM இணை தற்பொழுது நேரடியாக செவிமடுக்கலாம். சக்தி FM வானொலியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, தனது நேயர்களுக்காக புதிய ஆப்பிள், ஆன்ட்ரெய்ட் அப்ளிகேஷன் ஐ தற்பொழுது வெளியிட்டு உள்ளது. 

Friday, March 22, 2013

எஸ்.எம்.எஸ். மூலம் செல்போனை சார்ஜ் செய்யலாம்...!


நாளுக்கு நாள் விஞ்ஞானிகளின் புதுப்புது கண்டுபிடிப்பு நம்மை அதிசயிக்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் அனைவரும் விரும்பும் செல்போன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. தகவல் தொடர்பு, பொழுது போக்கு என அனைத்து அம்சங்களும் உள்ளது. இதில் செல்போனை ரீசார்ஜ் செய்ய அந்தந்த நிறுவனங்களுக்கு போன் செய்யலாம், ஆன் லைனிலும் ரீசார்ஜ் செய்யலாம்.

Saturday, March 16, 2013

இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட ASUS Transformer AiO டேப்லட்


முன்னணி கணனி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத்திகழும் ASUS நிறுவனமானது Transformer AiO எனும் விண்டோஸ் 8 மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களை ஒருங்கே கொண்ட டேப்லட்களை அறிமுகப் படுத்தியுள்ளது.

Thursday, March 14, 2013

கை கோர்க்கப் போகிறது ஆண்ட்ராய்டும், கூகுள் குரோமும்..




கலிபோர்னியா: ஒரு வழியாக கூகுளின் மிகப் பெரிய லட்சியம் நனவாகப் போகிறது. இதுவரை ஆண்ட்ராய்ட் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஆண்டி ரூபின் அந்தப் பொறுப்பிலிருந்து விலகி விட்டார். இதையடுத்து அந்தப் பொறுப்புக்கு தமிழரான சுந்தர் பிச்சை வருகிறார்.