உங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் சக்தி FM இணை தற்பொழுது நேரடியாக செவிமடுக்கலாம். சக்தி FM வானொலியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, தனது நேயர்களுக்காக புதிய ஆப்பிள், ஆன்ட்ரெய்ட் அப்ளிகேஷன் ஐ தற்பொழுது வெளியிட்டு உள்ளது.
உங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் ஆன்ட்ரெய்ட்காண சக்தி FM அப்ளிகேஷன் ஐ பதிவிறக்கி கொள்ளுங்கள்.
அதனை எவ்வாறு எமது கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்வது என்று இன்றைய தினம் பாப்போம். முதலில் Play Store க்கு சென்று அங்கு Search என்னுமிடத்தில் MBC Network என தட்டச்சிட்டு(Type) தேடவும் பின்னர் தோன்றும் MBC அப்ளிகேஷன் ஐ தரவிறக்கி அதனை தங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளில் நிறுவிக்கொள்ளுங்கள்.
நிறுவியதன் பின்னர் கீழே உள்ளது போன்று உங்களது மெனுவில்(Menu) MBC அப்ளிகேஷன் தோன்றும்
அதனை கிளிக் செய்து MBC அப்ளிகேஷன் ஐ திறந்து கொள்ளுங்கள் அதன் பின்னர் தோன்றுகின்ற மெனுவில் .
இரண்டாவதாக உள்ள SHAKTHI FM என்னும் Tap ஐ தெரிவு செய்து உள் நுழையுங்கள் அதன் பின்னர் தோன்றும் திரையில்.
Live Radio என்னும் பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான் இனி உங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளில் சக்தி FM நேரடியாக ஒலித்துக் கொண்டிருக்கும்.
இன்னும் இதனை இலகுவாக அறிந்துகொள்ள கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோ இணைப்பினை பாருங்கள்..
இறைவன் நாடினால் இனி அடுத்த பதிவில் உங்களை சந்திக்கின்றேன்..
இந்த பதிவு பயனுள்ளதாக அமைந்தால் உங்கள் கருத்துக்களை பகிரவும்
ReplyDeleteஎதுவானாலும்
ReplyDelete