கணினி உலகில் பெயர்பெற்ற கூகுள் நிறுவனம் கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து வெளியூர், வெளிநாட்டு பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவும் விதமாக வரைபடங்களை இணையதளத்தில்அளித்து வருகிறது. இதற்கு தகவல் பெறும்விதமாக இந்நிறுவனத்தின் கார்களின் மேற்கூரையில் சுழலக்கூடிய காமிராக்கள் பொருத்தப்பட்டு வீதிகளில் வரத்துவங்கின.
இத்தகைய கார்களில் உள்ள வலைத்தள தொகுப்பானது இதனைக் கடந்து செல்லும் பொதுமக்கள் யாரேனும் வலைத் தளத்தை உபயோகித்துக் கொண்டிருந்தால், அவர்களுக்குத் தெரியாமலேயே அதனைப் பதிவு செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
ஐரோப்பிய நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம், இது தனிமனித உரிமைகளை மீறும் செயலாகும் என்றும், இதற்கான நஷ்டஈட்டை கூகுள் நிறுவனம் அளிக்கவேண்டும் என்றும் வாதிட்டது.
3 வருடங்கள் கழித்து முடிவுக்கு வந்துள்ள இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் 37 மாநிலங்களுக்கு 7 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்கவேண்டுமென தீர்ப்பு வந்துள்ளது. நஷ்ட ஈடு பெறுவதைக்காட்டிலும் தனிமனித உரிமை மதிக்கப்படவேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் சாராம்சம் என்று கனக்டிகட் நீதிமன்றத்தின் அரசாங்க வக்கீல் ஜார்ஜ் ஜெப்சன்கூறினார். இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது குறித்து கூகுளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
சென்ற வருடம் இந்தப் பிரச்சினை குறித்த ஆய்வினைத் தடுக்க முயன்றதாக, மத்திய தகவல் குழு குற்றம் சாட்டியதன்பேரில் 25000 டாலர் அபராதத் தொகையினை கூகுள் செலுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.