Wednesday, March 20, 2013

மென்பொருட்களின் துணையின்றி விண்டோஸ் 7ல் SCREEN SHOT எடுக்க



மென்பொருட்களின் துணையின்றி விண்டோஸ் 7 ல் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க Snipping Tools புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக Keyboard உள்ள Print Screen கீயை உபயோகித்து பின்னர் MS Paint சென்று Paste செய்து பிறகு  தேவையானதை எடிட் பண்ணி பெற்றுக்கொண்டோம். 


தற்போது இலகுவான முறையில் Snipping Tools ஐ பயன்படுத்தி Screen Shot பெறமுடியும். அத்துடன் அதனை HTML, PNG, GIF, மற்றும் JPEG போன்ற Format களில் படத்தினை பதிவு செய்து கொள்ள முடியும். இன்னும் இதிலே இது போன்ற மேலும் அதிகமான வசதிகள் காணப்படுகின்றன.


Snipping Tools ஐ எவ்வாறு  பயன்படுத்துவது என்று இன்றைய பதிவில் நாம் பார்ப்போம்..

இதனை பயன்படுத்த  Start Menu  -  Search Box யில் Snipping Tools னு தட்டச்சிடவும் கீழே உள்ள படத்தை காணவும். (படத்தினை பெரிதாக பார்க்க படத்தின் மேலே கிளிக் பன்னவும்)



Snipping Tools யில் கிளிக் செய்து திறக்கவும், Snipping Tools திறக்கப்பட்டதும் திரை மங்கலாக தோற்றமளிக்கும். கீழே வலது பக்கமாக Snipping Tools மெனு தெரியும் அதில் பின்வருவன காணப்படும்.


அதில்  New, Cancel, Options, என்று மூன்று பகுதிகள் காணப்படும். அதிலே New என்பதற்கு அருகில் காணப்படுகின்ற சிறிய பொத்தானை அழுத்தினால் பின்வருமாறு தோன்றும்.


இதிலே நான்கு பகுதிகள் காணப்படுகின்றன அதிலே நீங்கள் எந்த முறையில் Screen Shot எடுக்க போகிறீர்கள் என்பதனை தெரிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் Screen Shot எடுக்கப்போகும் பகுதியை தெரிவு செய்து கொள்ளுங்கள். கீழுள்ள படத்தினை பார்க்கவும்.


அதன் பின்னர் நீங்கள் தெரிவு செய்த பகுதியானது தனியாக ஒரு விண்டோவில் தோன்றும். கீழ் உள்ளவாறு 


இதிலே தேவையான மாற்றங்களை மேற்கொண்ட பின்னர்  HTML, PNG, GIF, மற்றும் JPEG போன்ற  Format களில் படத்தினை Save பணிக்கொள்ள முடியும்.

இதனை இலகுவாக பயன்படுத்தி கொள்வதற்கு உங்களது டாஸ்க் பாரில் இதனை Shortcut ஆக இணைத்து கொள்ளுங்கள். இதனைப்போன்று அப்போது தேவையான நேரங்களில் ஒரு சொடுக்கின் மூலம் பயன் படுத்த முடியும்..




இன்றைய பதிவில் Snipping Tools பற்றி நாம் அறிந்து கொண்டோம். 

இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.







Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.