இம்மாதத்தில் தொழிநுட்ப உலகம் ஆர்வமாக எதிர்ப்பார்த்துள்ள நாள் மார்ச் 14 ஆகத்தான் இருக்கும் இதற்கான காரணம் செம்சுங்கின் கெலக்ஸி அன்றையே தினமே அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கான அழைப்பிதழ்களையும் செம்சுங் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளமை நீங்கள் அறிந்ததே.
இந்நிலையில் செம்சுங் கெலக்ஸி எஸ் 4 வினுடையது என நம்பப்படும் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.
சீனா நாட்டு தளமொன்றிலிருந்தே இவை வெளியாகியுள்ளன.
இப்படத்தின் படி 5 அங்குல திரையைக் கொண்டதாக குறித்த ஸ்மார்ட் போன் உள்ளது. மேலும் செம்சுங் கெலக்ஸி எஸ் 3 இன் தோற்றத்தை சற்று ஒத்ததாகவும் அது காணப்படுகின்றது.
இப்புகைப்படங்கள் இதுவரை உறுதி செய்யப்படாதபோதிலும் இவை எஸ் 4 ஆக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன.
இது உண்மையானதா அல்லது போலியானதா என இன்னும் சிறிது நாட்களில் தெரிந்து விடப்போகின்றது.
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.