முகப்புத்தகம், முகநூல் என்று தமிழில் அழைக்கப்படும் ஃபேஸ்புக் தளம் இணைய உலகை ஆட்சி செய்துக்கொண்டிருப்பதற்கு மேலும் ஓர் உதாரணம் அதிகமான தளங்களில் காணப்படும் "ரசிகர் பக்கம்" எனப்படும் Fan Page ஆகும். நமக்காக ஒரு ரசிகர் பக்கத்தை உருவாக்கும் முறையை இங்கு பார்ப்போம்.
01. முதலில் உங்கள் Facebook கணக்கைக் கொண்டு உள்நுழையுங்கள். உங்களுக்கு முகநூல் கணக்கு இல்லையென்றால் புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
02. பிறகு http://www.facebook.com/pages/create.php/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
03. அங்கு ஆறு விதமான Options இருக்கும். அதில் நீங்க உருவாக்க நினைக்கும் Fan Page க்கு பொருத்தமான Option ஐ தெரிவு செய்துகொள்ளுங்கள். உதாரணமாக அதில் “Brand or Product” என்பதை க்ளிக் செய்யவும்.
04. பிறகு Drop Down Box-ல் (அதாவது Choose a Category ல்) Website என்பதை தேர்வு செய்து, கீழே உங்கள் ரசிகர் பக்கத்திற்கான (அதாவது Brand or Product Name ல்) பெயரை டைப் செய்து, பின் "I agree to Facebook Pages terms" என்பதில் Check செய்து, "Get Started" என்பதை க்ளிக் செய்யவும்.
05. பிறகு உங்கள் Fan Page-ன் Dashboard பக்கத்திற்கு வந்துவிடும்.
(படம் 1 பார்க்க)
அங்கு உங்களது Profile Picture ஐ தெரிவு செய்ய சொல்லும். உங்களது கணனியில் உள்ள புகைப்படங்களை பதிவேற்ற முடியும். அல்லது Website மூலம் புகைப்படங்களை பதிவேற்றிக்கொள்ள முடியும்.
(படம் 2 பார்க்க)
அடுத்து வரும் பக்கத்தில் உங்களது Fan Page சம்மந்தமான அடிப்படை தகவல்களை வழங்கி, கீழுள்ள பெட்டியில் நீங்கள் ஏதும் வெப்சைட் வைத்திருப்பவராக இருப்பின் அதன் முகவரியை வழங்கவும்(கட்டாயம் இல்லை), ட்வீட்டர் கணக்கு இருப்பின் அதனையும் வழங்க முடியும்.
(படம் 3 பார்க்க)
இது அனேகமாக தேவைப்படாது என்பதால் இதுபற்றி எழுதவில்ல இதனை Skip பன்னவும்.
படம் 1 |
படம் 2 |
படம் 3 |
06. அதன் பின்னர் உங்களுக்க Fan Page பக்கத்துக்கான சுவர்(Well) தோன்றும்.
(ரசிகர் பக்க சுவர் சம்மந்தமான சிறிய அறிமுகம்.)
- 01. Notification :
இது உங்களது பக்கத்தின் நடைபெறும் நிகழ்வுகளை தெரிவிக்கும் பகுதி
அதாவது யார் யார் கருத்திடுகிறார்கள். விருப்பம் தெரிவிக்கின்றார்கள்
என்பதனை எமக்கும் தெரிவிக்கும்.
- ௦2. Massages :
தனிப்பட்ட முறையில் ரசிகர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்புவதற்கும்,
பெறுவதற்க்கும் Inbox ஆகவும் செயற்படுகிறது.
- 03. New Likes :
நமது பக்கத்துக்கு புதிய Liker கள் வருவதனை காட்டும்.
- 04. Insight :
நமது பக்கத்துக்கான பார்வையாளர்கள். விருப்பமிட்டவர்கள், மற்றும்
புதியவர்களை அழைத்தல், மின்னஞ்சல் மூலமாக அழைத்தல்
இப்பக்கதினை பகிர்தல் போன்றனவும் காணப்படும்.
இப்பிரிவில் நமது முகப்புத்தகத்தில் உள்ள நண்பர்களை அழைப்பதற்கு.
07. அதன் மேலுள்ள படத்தில் நீலநிறத்தில் வட்டமிட்டுள்ள பகுதில் அழுத்தி "Update Info", "Manage Permissions" பகுதிகளில் சில தகவல்களையும், மட்டுறுத்தல்களையும் உங்கள் விருப்பபடி நிறுவிக் கொள்ளுங்கள்.
மேற்சொன்னவாறு நாம் மாற்றங்கள் செய்துக் கொண்டிருக்கும் போது, வலது புறம் மேலே "View Page" என்ற பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யுங்கள். உங்கள் பக்கம் வந்துவிடும். அங்கு "Address Bar"-ல் இருக்கும் முகவரி தான் உங்கள் ரசிகர் பக்கத்தின் முகவரியாகும்.(உங்களுக்கு 25 ரசிகர்கள் கிடைத்த பின்னர். உங்கள் பக்கத்தின் தலைப்பிற்கு ஏற்றால் போல் User Name ஐ மாற்றிக்கொள்ள முடியும்.)
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்...
இப்பதிவு சம்மந்தமான சந்தேகங்கள் இருப்பின் இங்கே கேட்கவும்....
ReplyDelete