Showing posts with label CHROME. Show all posts
Showing posts with label CHROME. Show all posts

Thursday, May 16, 2013

இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு


நாம் அனைவரும் ஈமெயில் என்றால் அதிகமாக Gmail கணக்கினையே பயன்படுத்துகின்றோம். காரணம் Gmail நாளுக்கு நாள் தங்களது பாவனையாளர்களுக்கு புது புது வசதிகளை தினம் தினம் அறிமுகப்படுத்துவது தான். அவாராக நாம் பயன்படுத்துகின்ற ஜிமெயில் கணக்கினை இணைய வசதிகள் இல்லாத சந்தர்ப்பங்களில். தம் பாவனையாளர்கள் பயன்படுத்தும் பொருட்டு ஒரு வசதியினை நமக்கு தருகின்றது. அதாவது இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்த முடியும்.

இந்த வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நாம் இன்றைய பதிவில் பார்ப்போம்.

முதலில்  இதற்கு நீங்கள் Chrome பாவனியாளராக இருக்க வேண்டும். பின்னர் Gmail Offline நீட்சியை உங்களது Chrome ல் நிறுவ இந்த லிங்கில் சென்று. தோன்றும் விண்டோவில் ADD TO CHROME என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதன் பின்னர் அதனை நிறுவுவதற்கான அனுமதி கேட்கும். அதில் ADD என்பதனை கிளிக் செய்யுங்கள் சிறிது நேரத்தில் இந் நீட்சி உங்களது chrome இல் நிறுவப்பட்டிருக்கும்.



New Tab ஒன்றினை திறந்து கொண்டு அதிலே உள்ள Gmail Offline என்பதன் மேல் கிளிக் செய்யுங்கள்.



திறந்தவுடன் Allow offline mail பக்கம் தோன்றும் அதிலே நீங்கள் முதலாவதாக உள்ள Allow offline mail என்னும் ரேடியோ பட்டானை டிக் செய்து Continue என்பதனை கிளிக் செய்து உள்நுளையுங்கள்.


அதன் பின்னர் உங்களது மெயில் கணக்கு திறக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் உங்களது மெயில் ஐ இணைய வசதி உள்ள போது பயன்படுத்துவதை போன்று அணைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். Reply, Forward, Spam, Move to Folder, Label போன்ற அணைத்து பிரிவுகளையும் உங்களால் பயன்படுத்த முடியும்.  

இதனை பெற வலது பக்கமாக உள்ள (சிகப்பு நிறத்தில்) வட்டமிட்டுள்ள பொத்தானை அழுத்துங்கள்.



கீழே படத்தில் உள்ள வசதிகளையும் இந் நீட்சி உள்ளடக்கி உள்ளது.



இனிமேல் நீங்கள் இணய இணைப்பு இல்லாவிட்டாலும் உங்களது ஜிமெயில் கணக்கினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் ஏனைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்  உங்களை சந்திக்கின்றேன்.


Friday, May 10, 2013

கூகிள் குரோம் பாவனையாளர்களே பெரிய ஆபத்து. உஷார்...


கூகிள் குரோம் பாவனையாளரா நீங்கள் ? அப்படியானால் கண்டிப்பாக இதனை படியங்கள். இன்றைய இணைய உலகில், உலாவிகள் வரிசையில் தனக்கென தனியிடத்தில் குரோம் முத்திரை பதித்திருக்கின்றது.  அதிகமானோரால் விரும்பி பயன்படுத்தப்படுகின்றது உலாவியாக குரோம் விளங்குகின்றது. பல்வேறு வகையான வசதிகளை கொண்ட குரோமில் உள்ள ஆபத்தினை பற்றி பார்ப்போம்.

Saturday, April 20, 2013

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளது என அறிய வேண்டுமா!


இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது.

Sunday, April 7, 2013

கூகிளில் துணைநிலை முகவரிகள் தடைசெய்யப்பட்டது...!


உலகின் முன்னணி தேடல் தளமான கூகிள் ஸ்பாம் செய்பவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதில் ஒரு பகுதியாக தற்போது கூகிளில் .co.cc டொமைன் வழங்கி தடுக்கப்பட்டுள்ளது, .co.cc என்பது ஒரு இலவச டொமைன் வழங்கியாகும் எனவே பணம் கட்டி .com,.net,.org வாங்க முடியாத பலர் இந்த இலவச டொமைனில் தங்கள் தளத்தை நடத்திவருகிறார்கள்.

Thursday, March 14, 2013

கை கோர்க்கப் போகிறது ஆண்ட்ராய்டும், கூகுள் குரோமும்..




கலிபோர்னியா: ஒரு வழியாக கூகுளின் மிகப் பெரிய லட்சியம் நனவாகப் போகிறது. இதுவரை ஆண்ட்ராய்ட் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்தை கவனித்துக் கொண்டிருந்த ஆண்டி ரூபின் அந்தப் பொறுப்பிலிருந்து விலகி விட்டார். இதையடுத்து அந்தப் பொறுப்புக்கு தமிழரான சுந்தர் பிச்சை வருகிறார்.

Tuesday, February 19, 2013

இணையப் பக்கங்களை சுயமாகவே திறக்கச் செய்வதற்கு






தொடர்ச்சியாக இணையத்தளங்களில் பணிபுரிபவர்களுக்கு புதிய இணையப்பக்கங்களை அடிக்கடி திறக்க வேண்டி ஏற்படும். இதனால் மணிக்கட்டில் வலிபோன்றன ஏற்படும் சந்தர்ப்பங்களும் வெகுவாகவே காணப்படுகின்றன.