கூகிள் குரோம் பாவனையாளரா நீங்கள் ? அப்படியானால் கண்டிப்பாக இதனை படியங்கள். இன்றைய இணைய உலகில், உலாவிகள் வரிசையில் தனக்கென தனியிடத்தில் குரோம் முத்திரை பதித்திருக்கின்றது. அதிகமானோரால் விரும்பி பயன்படுத்தப்படுகின்றது உலாவியாக குரோம் விளங்குகின்றது. பல்வேறு வகையான வசதிகளை கொண்ட குரோமில் உள்ள ஆபத்தினை பற்றி பார்ப்போம்.
இன்றே விழித்துக் கொள்ளுங்கள் உங்கள் இணைய பாவனை உலாவியான குரோமில் உள்ள ஆபத்து என்னவென்றால். நமது அநேகமானவர்களின் இனைய இணைப்பு இருப்பது கிடையாது இதற்காக நான் அனேகமா ப்ரௌசிங் செண்டர்கலையே பயன்படுத்துகின்றோம்.
நீங்கள் செல்லுகின்ற ப்ரௌசிங் சென்டரில் உள்ள அனைவரையும் நல்லவர்கள் என்று நம்பிவிட முடியாது.(ஒரு சிலரைத் தவிர) நாம் தான் கவனமாகவும், உசாரகவும் நடந்து கொள்ள வேண்டும். அதிலும் பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
"உங்கள் ஈமெயில் முகவரி மட்டுமல்ல அதனுடைய கடவுசொல்லையும் பதிவு செய்யும் வசதி" இந்த குரோமில் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.? நீங்கள் ஒழுங்கு முறையாக சைனவுட்(Sign Out) செய்து விட்டு சென்று விடுவீர்கள். ஆனால் உங்களது ஈமெயில் முகவரியும், கடவுச்சொல்லும் பத்திரமாக சேமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களுக்கு தெரியாது.
நீங்கள் யாராவது முக்கியாமனவர்களுக்கு ஏதேனும் மெயில் அனுப்பி இருக்கலாம் அல்லது உங்களது முக்கியமான தகவல்களையோ பதிவு செய்து வைத்திருப்பீர்கள். இதனை அவர்கள் தவாறாக பயன்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அதை விட உங்களது நெருங்கிய நண்பருக்கோ அல்லது உங்களது மேல் அதிகாரிகளுக்கோ தவறாக மெயில் அனுப்பிவிடலாம், அவர்கள் அதனை நீங்கள் அனுப்பியதாக எண்ணி உங்களது அன்பை வெறுக்க நேரிடும்.
இனிமேல் உங்களுக்கு அந்த பிரச்சினை வராது. நான் சொல்வதை முறையாக செய்துவிடுங்கள்.
எங்கு சென்று குரோம் பயன்படுத்தினாலும். ஓபன் செய்ததும் Setting சென்று கீழே உள்ள Show Advance Setting என்பதனை கிளிக் செய்யுங்கள் அதன் பின்னர் Password and Forms என்பதில் இரண்டாவதாக உள்ள offer to save I enter on the web. என்பதிலுள்ள ரேடியோ பட்டானை Un Select செய்து விடுங்கள்.
அவ்வளவுதான் இனி உங்களது வேலைகள் முடிந்தவுடன் History சென்று Clear History கொடுத்துவிடுங்கள்.
உங்கது தகவல்களை பாதுகாப்பது உங்கள் கைகளிலே உள்ளது .
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் மீண்டும் சந்திக்கின்றேன்.
thanks a lot.........
ReplyDelete