பிரபல இணைய உலவியான ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் மொபைல்களுக்கான தனி இயங்குதளத்தை உருவாக்கியுள்ளதையடுத்து தற்போது பயர்பாக்ஸ் நிறுவனம் TCL, ZTE, LG மற்றும் Huawei போன்ற சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பயர்பாக்ஸ் இயங்குதளம் கொண்ட மொபைல்களை இந்த வருடம் மத்தியில் வெளியிடவுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக ஆன்ட்ராய்ட் கூகுள் ப்ளே, ஆப்பிள் App Store போன்று Firefox Marketplace என்னும் அப்ளிகேஷன் சந்தையையும் அது தற்போது திறந்துள்ளது. இதில் மொபைல்களுக்கு மற்றும் கணினிகளுக்கான அப்ளிகேஷன்கள், விளையாட்டுகளும் கிடைக்கின்றன.
இதில் சிறப்பு என்னவென்றால் மொபைல் அப்ளிகேஷன்களை உங்களுடைய ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் Firefox Beta ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை நிறுவியிருக்க வேண்டும்.அப்ளிகேஷன்களை தரவி்றக்க செய்ய Firefox Marketplace என்ற லிங்கில் செல்லுங்கள்.
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.