Monday, April 15, 2013

Facebook Game மற்றும் Application Request-களை தடுக்க புதிய வழி

எப்போது நாம் பேஸ்புக்கில் உள்நுழைந்தாலும் யாரேனும் நண்பர்கள் நமக்கு Games மற்றும் Applications Request களை தந்திருப்பார்கள். இது  போன்ற அழைப்புகளை பெரும்பாலனவர்கள்  விரும்புவது  கிடையாது.  தொடர்ந்து வருவதை தடுக்க முடியாது. 

அவற்றை தடுக்க முன்பு Privacy Settings பகுதிக்கு சென்று அதனை  Block செய்யும் முறையை முறை பற்றி எழுதி இருந்தேன். இப்போது  நான் சொல்லப்போகும் வழி இன்னும் எளிதானது. 

எவ்வாறு செய்வதென்பதனை இப்பொழுது பார்ப்போம். உங்களுக்கு வந்திருக்கும் Games மற்றும் Application Request -கள் வலது புற Side Bar பகுதியில் இருக்கும். 



இப்போது அதன் மீது Mouse ஐ Hover செய்தால் வலது புறம் ஒரு சிறிய பெருக்கல் குறி (X) தோன்றும். அதன் மீது கிளிக் செய்யுங்கள். 



அதில் இரண்டு வசதிகள் இருக்கும்.
01. Remove All Requests 
02. Block. (Block என்பதில் Game பெயரும் இருக்கும்.)

Remove All Requests என்பதை கொடுத்தால் தற்போது வந்துள்ள Game மற்றும் Application Request கள் அனைத்தும்  நீக்கப்பட்டு விடும். Block என்பதை கிளிக் செய்து பின்னர் Confirm செய்தால் குறிப்பிட்ட Game ஐ அல்லது Application ஐ நீங்கள் Block செய்து விடலாம். 



மறுபடி வேறு நண்பர்கள் குறிப்பிட்ட Game அல்லது Application Request ஐ உங்களுக்கு அனுப்பும் போது அது வராது.


இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதில் சந்திக்கின்றேன்.



Post Comment

0 கருத்துக்கள்:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.