விண்டோஸ் 7 இயங்கு தளம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம் இதில் எல்லா வசதிகளும் உள்ளன, இதில் நமக்கு தெரியாத புதிய வசதி ஒன்று உள்ளது அதுதான் நாம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் ஒரு தீமை உருவாக்கி அதனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதனை எப்படி செய்வது என்று இப்பதிவில் காணலாம்.
முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் க்ளிக் செய்து Personalize என்பதை தேர்ந்தெடுங்கள்.
தோன்றும் விண்டோவில் கீழ் பகுதிக்கு சென்று அதில் இருக்கும் Desktop Background என்பதை தேர்வு செய்யுங்கள்.
Step : 03
அதில் இருக்கும் Browse என்பதை தேர்வு செய்து. நீங்கள் பதிவேற்ற நினைக்கும் புகைப்படங்கள் இருக்கின்ற பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் படங்களை தேர்வு செய்த பிறகு எண்டர்(Enter Key) ஐ அழுத்துங்கள்.
உங்கள் தீம்(Theme) இப்பொழுது உங்களுடைய Desktop Backgroundல் இயங்கியிருக்கும், அதே விண்டோவின் கீழ் பகுதியில் காணப்படும் Sounds என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு விருப்பமான ஒலிகளையும் நீங்கள் அதில் சேர்த்துக்கொள்ள முடியும். (நீங்கள் சேர்க்கும் ஒலியானது கட்டாயம் .wav என்ற பார்மட்டில்(Format) இருக்கவேண்டும்).
அந்த தீமின்(Theme) மேல் ரைட் க்ளிக் செய்து Save Theme For Sharing என்பதனை க்ளிக் செய்யவும், தோன்றும் விண்டோவில் முதலில் சேவ் செய்வதற்கான இடத்தை தெரிவு செய்யவும், அதன் பின்னர் Theme Fileக்கான பெயரினையும் வழங்கி சேவ் செய்து கொள்ளவும்.
அவ்வளவுதான் இனி உங்களின் தீம் கோப்பு தயார் இதை நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம், உங்கள் தளத்தில் பயனர்களுக்காக பதிவேற்றம் செய்யலாம்.
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்..
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.