கீ லாகர்ஸ் என்பவை நாம் தட்டும் விசைகளை ஒரு டெக்ஸ்ட்(.txt) பைலாக சேமித்து இணையத்தின் மூலமாக அதை நிறுவிய நபருக்கு அனுப்பவோ அல்லது அதை அவர் திறந்து பார்க்கும்வரை சேமித்து வைக்கவோ பயன்படுகிறது, ஹாக்கிங்கில் இவையே இரண்டாவது இடத்தில் உப்யோகிக்கபடுகிறது. இந்த கீலாகரிலிருந்து நாம், நம் தகவல்களை பாதுகாத்துக் கொள்வொதற்கான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.
உங்கள் Firewall ஐ எனேபில் செய்திடுங்கள்: Firewall மூலம் கீ லாகர்ஸை தடுக்க முடியாது. ஆனால் கீ லாகர்ஸ் உங்களுக்கு தெரியாமல் உங்கள் இணையத்தின் மூலம் தகவல்களை அனுப்புவதை தடுக்க முடியும்.
நல்ல வைரஸ் எதிர்ப்பான் (ANTI VIRU) மென்பொருளை பயன்படுத்துங்கள்: நல்ல வைரஸ் எதிர்ப்பானை மட்டுமே பயன்படுத்துங்கள், CRACK செய்யப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். முடிந்தவரை டோரண்டிலிருந்து மென்பொருள் தரவிறக்கி பயன்படுத்துவதை தவிர்க்கவும், ஏனென்றால் TORRENT தான் ஹாக்கர்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.
முடிந்தால் ஒரு ANTI SPYWARE மென்பொருளையும் பயன்படுத்தலாம். இவை கீ லாகர்ஸ் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் முன்கூட்டியே நமக்கு எச்சரிக்கை செய்யும்.
உங்கள் கணினியில் KEY LOGGER நிறுவப்பட்டிருக்குமா என நீங்கள் சந்தேகித்தால் உங்கள் தகவலை பாதுகாக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.
01. வீட்டிலும் பொது இடங்களிலும் உங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை டைப் செய்ய உங்கள் கணினியின் கீ போர்டை பயன்படுத்தாமல் ஆன் ஸ்கிரீன் கீ போர்டை(on screen keyboard) பயன்படுத்தவும், விண்டோசில் அதனை ஒப்பன் செய்ய OSK என Run கம்மாண்டில் டைப் செய்யவும்.
Picture - 01 |
Picture - 02 |
02. வீட்டிலோ, பொது இடங்களிலோ, அல்லது உங்கள் அலுவலகங்களிலோ, எல்லா கணினிகளிலும் உங்கள் கடவுச்சொல்லை டைப் செய்யும் முன் தேவையற்ற 2-4 எழுத்துக்களை டைப் செய்து பின்னர் அதனை மௌசால் செலக்ட் செய்து கொண்டு பின்னர் உங்கள் கடவுச்சொல்லை டைப் செய்யவும், இதனால் உங்கள் கீலாகரில் தவறான கடவுச்சொல்லே சேமிக்கப்படும்.
03. கீ லாகர்ஸ் எப்போதும் பின்புலத்தில்(Background) உங்களுக்கு தெரியாமல் இயங்கிக்கொண்டிருக்கும், எனவே டாஸ்க் மேனஜரை(TASK MANAGER) செக் செய்து சந்தேகப்படும்படியான ப்ராசஸ்களை(process end) எண்ட் செய்துவிடவும்.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் உங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் உபயோகமான குறிப்புகளாக இருக்குமென நம்புகிறேன்,
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன், நன்றி...
இப் பதிவானது தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் கண்டிப்பாக இதனை பகிர்ந்து கொள்ளுங்கள் .... தவறாது பின்னூட்டமிட்டு செல்லவும்.
பதிவு சம்மந்தமான கேள்விகளை இங்க கேட்கவும்...
ReplyDeleteதவறுகளை தவறாது சுட்டிக்காட்டவும்...
தலைப்புப் பட்டையில் (Menu Bar) இனையம் என்று இருப்பதை இணையம் என்று மாற்றவும்.
Delete