இணையத்தில் இருக்கும் பல நண்பர்களுக்கு தமிழ் தட்டச்சு பற்றி தெரியாது இருக்கின்றனர். இன்னமும் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்று கேட்கிறார்கள். தமிழ் மொழி பயன்படுத்துதலில் புதியவர்களுக்கு மிக எளிதாக தட்டச்சு செய்யும் வசதியினை எமக்கு தருவது Google Tamil Transliteration. இதனை எப்படி பயன்படுத்துவது என்று இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்வோம்.
01. முதலில் இங்கே சென்று தட்டச்சு மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதில் தமிழ் மொழியை தெரிவு செய்த பின் Google இன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கையை ஏற்கிறேன். எனும் இடத்தில் கிளிக் செய்து உறுதி செய்யவும். 32Bit / 64Bit என்பதை தெரிவு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். எது என்று தெரியாதவர்கள் 32Bit தெரிவு செய்யவும்.
02. Windows 7/Vista/XP பயன்படுத்தும் நண்பர்கள் அனைவரும் இதனை பயன்படுத்த இயலும்.
03. இதை இப்போது இன்ஸ்டால் செய்யவும்.
04. இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் Desktop -Task Bar இல் Right Click செய்து Toolbars -> Language bar என்பதை தெரிவு செய்யவும்.
இதில் இந்த வசதி வராத நண்பர்கள் கீழே உள்ளதை பின் பற்றவும்.
05. Windows 7/Vista பயனாளிகள்.
- Control Panel -> Clock, Language, Region --> Regional and Language Options -> Keyboard and Languages என்பதற்கு செல்லவும்.
- Change keyboards... என்பதை கிளிக் செய்து Text services and input languages என்பதை ஓபன் செய்யவும்.
- Language Bar க்கு வரவும்.
- Language Bar -ல் உள்ள Docked in the taskbar என்ற ரேடியோ பட்டனை Enable செய்ய வேண்டும்.
இப்போது Apply கொடுக்கவும். இப்போது நீங்கள் மேலே கூறி உள்ள Step-4 ஐ செய்யவும்.
06. Windows XP பயனாளிகள்.
- Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு செல்லவும்.
- முதலில் System configuration, என்பதில் Turn off advanced text services என்பது கிளிக் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
- Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab என்பதற்கு மீண்டும் செல்லவும்.
- இப்போது Settings>Language Bar ஐ கிளிக் செய்து அதில் Details >Language bar என்பதை தெரிவு செய்து வருவதில் Show the Language bar on the desktop என்பதை கிளிக் செய்து விடவும்.
- இப்போது எல்லாவற்றையும் Apply கொடுத்து விடவும்.
(மன்னிக்கவும் என்னிடம் XP இல்லாத காரணத்தால் மேலதிக படம் இணைக்க முடியவில்லை.)
07. இப்போது உங்கள் Tool Bar இல் கீழே உள்ளது போல ஒன்று வந்து சேர்ந்து விடும்.
Windows XP |
Windows 7 |
08. இதில் தட்டச்சு செய்யும் போது கிளிக் செய்தால் துணை Menuவில் Tamil என்று வரும். அதனை தெரிவு செய்யது கொள்ளவும்.
09. இது உங்களுக்கு Desktop இல் இவ்வாறு தோற்றம் அளிக்கும். அதிலே TA என்பதுக்கு அருகில் உள்ள Keyboard ஐகான் மீது கிளிக் செய்தால் Tamil, Google Input Tools என இரு பிரிவுகள் காணப்படும் அதில் Google Input Tools என்பதனை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
- அதன் பின்னர் உங்கள் டெஸ்க்டாப் இல் இது போன்று காட்சியளிக்கும்.
10. இப்போது நீங்கள் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். உதாரணம்:
- Amma - அம்மா,
- Tamil - தமிழ்
- இதில் மாற்று வார்த்தைகள் அடுத்தடுத்து வருவதை கவனிக்கவும். இதை Key Board-இல் உள்ள Down/Up Arrows பட்டன்களை பயன்படுத்தி தெரிவு செய்ய முடியும்.
11. இதில் சரியாக தட்டச்சு செய்தும் உங்களுக்கு சில எழுத்துகள் வரவில்லை என்றால் Ctrl+K என்பதை கொடுத்து குறிப்பிட்ட எழுத்தை இடைச் செருகலாக சேர்க்கலாம்.
12. இதில் இருந்து உடனடியாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய CTRL+G கொடுக்கவும்.
இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.