Tuesday, March 25, 2014

யூடியூப் வீடியோக்களை மிக இலகுவாக பதிவிறக்கம் செய்ய (வீடியோ)

நாம் அனைவரும் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கு பல்வேறு வழி முறைகளை பின்பற்றுகின்றோம். நான் இன்று உங்களுக்கு மிக இலகுவான வழிமுறை ஒன்றினை பற்றி சொல்லி தர போகின்றேன். 


Sunday, July 14, 2013

சம்சுங் மொபைலில் முக்கியமான குறியீட்டு எண்கள்...




இன்றைய கையடக்க தொலைபேசியின் வளர்ச்சியின் சிகரம் தொட்டு இருக்கின்றது சம்சுங் நிறுவனம். அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் நாளுக்கு நாள் புதுமைகளை எமக்கு அறிமுகம் செய்கின்றது.

இன்று சம்சுங் மொபைல் பெரும் வரவேற்பை மக்களிடையே கொண்டுள்ளது. சம்சுங் மொபைல் பயன்படுத்தும் நாம் அவசியமாக அறிந்து இருக்க வேண்டிய முக்கியமான குறியீடுகளை இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

Friday, July 12, 2013

அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் இருந்து WI FI மூலமாக உங்களது கணனிகளை இணையத்துடன் இணைப்பதற்கு..




நாம் ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்துகின்ற Mobile Data களைக் கொண்டு அதனை Wi Fi ஆக மாற்றி  எமது கணனிகளில் இணைய தளங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். 

இதனை பயன்படுத்த எமக்கான Wi Fi கணக்கு ஒன்றினை நாம் வைத்திருக்க வேண்டும் இதனை எமது ஸ்மார்ட் தொலைபேசிகளில் இருந்து எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நான் இன்றைய பதிவில் கற்றுத்தருகின்றேன்..

Wednesday, May 22, 2013

அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் எவ்வாறான தோற்றத்திலும் இருக்கலாம்!.. எச்சரிக்கை !





இன்றைய நவீன காலகட்டத்தில் பெண்களின் அந்தரங்க காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து, அதை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் சம்பாதிக்கும் இழிய கூட்டம்  பெருகிவருகிறது.இதற்காக அவர்கள் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கமெராக்களை பலவடிவங்களில் பயன்படுத்துகிறார்கள்.

ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது எப்படி ?



இன்றைய காலகட்டத்தில் ஆன்ட்ராய்ட் தொலைபேசிகளை பயன்படுத்தும் தமிழ் பேசுபவர்களாகிய நாம்   ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற பிரச்சினை தமிழில் எழுதுவது, படிப்பது தான். இனி அந்த பிரச்சினை உங்களுக்கு வேண்டாம்.  உங்களுக்கு ஆன்ட்றாய்ட் தொலைபேசிகளில் தமிழ் எழுதுவது படிப்பது பற்றி நான் இன்றைய பதிவில் சொல்லி தர போகிறேன்.





ஆண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதற்கு :

ஆன்ட்ராய்ட்டில் தமிழில் எழுதுவதற்கு பல்வேறு அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில. 

நான் பயன்படுத்துவது எழுத்தாணி, அதனையே உங்களுக்கும் சொல்லி தருகிறேன். நீங்கள் Play Store சென்று எழுத்தாணி என்னும் அப்ளிகேஷனை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். 



இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings > Language & Input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & Input Methods என்ற இடத்தில் (Ezhuthani) இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.



அதன் பின்னர் நீங்கள் எழுத துவங்கும் முன்பு திரையின் மேலே Swipe செய்து Choose Input Method என்று இருப்பதை Tap செய்யுங்கள்.



அதன் பின்னர் நீங்கள் நிறுவிய அப்ளிகேஷனை Tap செய்யுங்கள். அவ்வளவு தான் இனி தமிழில் உங்களால் எழுத முடியும்.


ஆண்ட்ராய்டில் தமிழில் படிப்பதற்கு :


ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களை மொபைலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே எம்மால் படிக்க முடியும். அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ஒரு சிறிய மாற்றத்தினை மட்டும் செய்தால் போதும். 

அதாவது Browser  Setting பகுதியில் Language என்ற இடத்தில் "Auto-Detect" என்று மாற்றினால் Browser ல் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.


எந்த ஒரு ஆண்ட்ராய்ட் பதிப்பாக இருந்தாலும் சரி Opera Mini உலாவியில் தமிழ் எழுத்துக்களை உங்களால் படிக்கமுடியும் அதற்கு நான் கீழே சொல்ல போகும் மாற்றங்களை மட்டும் நீங்கள் செய்தால் போதும்.


Opera Mini உலாவிக்கு சென்று அங்கே மேலுள்ள Address Bar இல் opera:config என டைப் செய்து Go என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து வருகின்ற பக்கத்தில்  Use bitmap fonts complex scripts என்னுமிடத்தில் No என்று இருப்பதை Yes என மாற்றம் செய்யுங்கள்.


Yes என மாற்றம் செய்த பின்னர் கீழுள்ள Save என்ற பட்டாணி அழுத்தி Save செய்து கொள்ளுங்கள்.

இனி உங்களது தொலைபேசிகளில் தமிழ் தளங்களை பார்வையிட முடியும். (கீழுள்ள படத்தினை கவனிக்க..)



பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கின்றேன்.



Thursday, May 16, 2013

இந்த வார டாப் 10 தொழில்நுட்பங்கள்.



001.
Samsung இன் 7-Inch Galaxy Tab 3 :

Android 4.1 or Jelly Bean இயங்குதளத்தில் இயங்கும் 7-Inch வகை Galaxy Tab 3 ஐ Samsung அறிமுகம் செய்தது.



002.
இயற்கையாக ஒளிரும் தாவரங்கள் :

உயிரியல் ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்கள் குழு வினால் Genome Compiler நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒளிரும் தாவர திட்டம். செயற்கை உயிரியல் மற்றும் மரபணு மூலம் இயற்கையான ஒளி உற்பத்தி செய்யும் தாவரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.



003.
Intel நிறுவனத்தின் புதிய 'Iris' கிரபிக்கல் சிப்கள் :

intel அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் Haswell Processors களுக்காக விறந்த கிரபிக்கல் அனுபவத்தை தரும் Iris கிரபிக்கல் சிப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.



004.
LG இன் உலகின் முதலாவது வளைந்த 55-Inch திரை கொண்ட OLED TV :

தற்போது தென்கொரியாவில் இவ் வகை TV களுக்கான முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


005.
Acer நிறுவனத்தின் வின்டோஸ் - அன்ரோய்ட் கலந்த டப்லட் கணினிகள் :


006.
ஸ்மார்ட் போன்களுக்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் :

இது தொடர்பான விரிவான பார்வைக்கு (வீடியோ) :


007.
Alert செய்வதற்காக தனது வடிவை மாற்றக்கூடிய ஸ்மார்ட் போன் திரை :

இது தொடர்பான விரிவான பார்வைக்கு (வீடியோ) :

 

008.
IBM நிறுவனத்தின் உலகின் மிக சிறிய திரைப்படம் உருவாக்கப்பட்டது :

IBM நிறுவனம் உலகின் மிக சிறிய திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இத் திரைப்படத்தி மைக்றோஸ்கோப் உதவியுடன் 100 மில்லியன் மடங்கு பெருப்பித்தாலே பார்க்கமுடியும்.



009.
கூகுலின் தன்னியக்க காரின் திரும்புதல் நுட்பம் :



010.
கூகுல் கண்ணாடி :




இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்..


இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு


நாம் அனைவரும் ஈமெயில் என்றால் அதிகமாக Gmail கணக்கினையே பயன்படுத்துகின்றோம். காரணம் Gmail நாளுக்கு நாள் தங்களது பாவனையாளர்களுக்கு புது புது வசதிகளை தினம் தினம் அறிமுகப்படுத்துவது தான். அவாராக நாம் பயன்படுத்துகின்ற ஜிமெயில் கணக்கினை இணைய வசதிகள் இல்லாத சந்தர்ப்பங்களில். தம் பாவனையாளர்கள் பயன்படுத்தும் பொருட்டு ஒரு வசதியினை நமக்கு தருகின்றது. அதாவது இணைய இணைப்பு இல்லாமலே Gmail ஐ பயன்படுத்த முடியும்.

இந்த வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை நாம் இன்றைய பதிவில் பார்ப்போம்.

முதலில்  இதற்கு நீங்கள் Chrome பாவனியாளராக இருக்க வேண்டும். பின்னர் Gmail Offline நீட்சியை உங்களது Chrome ல் நிறுவ இந்த லிங்கில் சென்று. தோன்றும் விண்டோவில் ADD TO CHROME என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதன் பின்னர் அதனை நிறுவுவதற்கான அனுமதி கேட்கும். அதில் ADD என்பதனை கிளிக் செய்யுங்கள் சிறிது நேரத்தில் இந் நீட்சி உங்களது chrome இல் நிறுவப்பட்டிருக்கும்.



New Tab ஒன்றினை திறந்து கொண்டு அதிலே உள்ள Gmail Offline என்பதன் மேல் கிளிக் செய்யுங்கள்.



திறந்தவுடன் Allow offline mail பக்கம் தோன்றும் அதிலே நீங்கள் முதலாவதாக உள்ள Allow offline mail என்னும் ரேடியோ பட்டானை டிக் செய்து Continue என்பதனை கிளிக் செய்து உள்நுளையுங்கள்.


அதன் பின்னர் உங்களது மெயில் கணக்கு திறக்கப்படும். அதன் பின்னர் நீங்கள் உங்களது மெயில் ஐ இணைய வசதி உள்ள போது பயன்படுத்துவதை போன்று அணைத்து வசதிகளையும் பயன்படுத்த முடியும். Reply, Forward, Spam, Move to Folder, Label போன்ற அணைத்து பிரிவுகளையும் உங்களால் பயன்படுத்த முடியும்.  

இதனை பெற வலது பக்கமாக உள்ள (சிகப்பு நிறத்தில்) வட்டமிட்டுள்ள பொத்தானை அழுத்துங்கள்.



கீழே படத்தில் உள்ள வசதிகளையும் இந் நீட்சி உள்ளடக்கி உள்ளது.



இனிமேல் நீங்கள் இணய இணைப்பு இல்லாவிட்டாலும் உங்களது ஜிமெயில் கணக்கினை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பதிவு பயனுள்ளது என நீங்கள் கருதினால் ஏனைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த பதிவில்  உங்களை சந்திக்கின்றேன்.