உலகில் அனைத்து துறைகளிலும் சில புகழ்பெற்ற நிறுவனங்கள் இருக்கவே செய்கின்றன. அந்தவகையில் தொழில்நுட்ப துறையிலும் புகழ்பெற்ற நல்ல நிறுவனங்கள்நூற்றுக்கணக்கில் இருக்கவே செய்கின்றன.
அந்நிறுவனங்களின் ஒரு சிலவற்றின் பெயர் மற்றும் அதுசார்ந்த பின்னணி விபரங்கள் பற்றி பார்ப்போம்..
- அமேசான்: [Amazon]
இந்நிறுவனத்தின் பெயர், அமேசான் நதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அந்நதியை போலவே தற்பொழுது இணையவழி சில்லறை வணிகத்தில் அமேசான், உலகம் முழுவதிலும் விரிவடைந்துள்ளது.
- ட்விட்டர்: [Twitter]
சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய இடத்திலுள்ள ட்விட்டர் தளத்தின் பெயர் சற்றே வித்யாசமானது. ட்விட்டர் என்ற பெயருக்கு 'வெற்றியாளர்' என்று பொருள் சொல்லப்படுகிறது.
- பைடு: [Baidu]
இந்தப் பெயரானது 800 ஆண்டுகால பழமையான சீன கவிதையிலிருந்து பெறப்பட்டது.
- கிண்டில்: [Amazon Kindle]
கிண்டில் என்பது அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பு. கிண்டில் என்றால், விளக்கிற்கு ஒளியேற்றுவது என்பதே பொருள். இந்த கிண்டில் சாதனம் மூலமாக இ-புக்களை படிப்பது மிகவும் எளிது.
- இன்ஸ்டாகிராம்: [Instagram]
இன்ஸ்டாகிராம் என்பதற்கு 'இங்கேயே, இப்பொழுதே பதிவுசெய்தல்' என்பதே பொருள்.
- நோக்கியா: [Nokia]
நோக்கியன்விர்தா என்ற நதியின் பெயரின் பாதியே நோக்கியா என்றழைக்கப்படுகிறது.
- ஈபே: [EBay]
ஈபே நிறுவனத்தின் முழு பெயர் 'எக்கோ பே தொழில்நுட்ப குழு' என்பதாகும். இதை சுருக்க நினைத்தவர்கள், எக்கோ பே என்று பெயரிட்டார்கள். அதை ஏற்கெனவே ஒரு நிறுவனம் வைத்திருப்பதால், ஈபே.காம் என்று இன்னும் சுருக்கப்பட்டிருக்கிறது.
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.