உலகம் முழுவதும் இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஃபேஸ்புக் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டதில் 19வயதுக்குட்பட்டவர்கள் செய்யும் குற்றங்களுக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தி இளைஞர்கள் பாலியல் குற்றங்கள் அதிகம் புரிந்த்தாக புகார்கள் உலகெங்கும் வந்துகொண்டே இருக்கின்றது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் ஐந்தில் ஒரு இளைஞர் பேஸ்புக்கை பயன்படுத்தி குற்றங்கள் செய்வதாக சைபர் கிரைம் தனது ஆய்வுக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் டுவிட்டர் போன்ற இணைய தளங்களும் இந்த வகை குற்றங்களுக்கு காரணமாக இருப்பதையும் அந்த கட்டுரை தெரிவித்துள்ளது.
பேஸ்புக் மூலம் எத்தனையோ சமுதாய பிரச்சனைகள் மக்கள் மத்தியில் கொண்டு சென்றாலும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதால் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை தடம் மாற்றிக்கொள்ளும் பயங்கரமும் நடந்து கொண்டு வருவதால் உலக நாடுகள் பெரும் கவலை அடைந்துள்ளன.
0 கருத்துக்கள்:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.